தமிழில் பேஸ்புக் கணக்கை உருவாக்குவது எப்படி? How to create a Facebook Account in tamil?

தமிழில் பேஸ்புக் கணக்கை உருவாக்குவது எப்படி? How to create a Facebook Account in tamil? Weblog Tamil, நீங்கள் இதுவரை பேஸ்புக்கை பயன்படுத்தவில்லை எனில், உங்களுக்கு பேஸ்புக்கில் புதியதாக கணக்கை தொடங்குவது எப்படி என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது மிகவும் எளிமையானதுதான். தேவையான அனைத்து தகவல்களையும் பிரதான பேஸ்புக் பக்கத்தில் உள்ளிட்டு, ஓரிரு நிமிடங்களில் புதிய கணக்கை உருவாக்கலாம். உங்கள் புதிய கணக்கைப் பெற்றதும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், செய்திகளை அனுப்பவும், வீடியோக்களைப் பதிவேற்றவும், புகைப்படங்களை பகிரவும், குழுவில் சேரவும் மற்றும் செயல்பாடுகளை கண்டறியவும் இதைப் பயன்படுத்தலாம். சரி... பேஸ்புக் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைக் காண்போம். நீங்கள் Mobile ஐ பயன்படுத்தினால் : தற்பொழுது பேஸ்புக்கில் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அதில் கணக்கை உருவாக்க முடியும். Facebook.com/r.php இதனை கிளிக் செய்யுங்கள். உங்களுடைய உண்மையான பெயரை உள்ளிடுங்கள். பின்பு உங்களின் பிறந்த தேதியை உள்ளிடுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் போன் நம்...