பிளாக்கிங் தளத்தைத் தேர்வு செய்தல் | Choosing a Blogging Site
Blog பகுதி -3
பிளாக்கிங் தளத்தைத் தேர்வு செய்தல்..!
Choosing a Blogging Site..!
Choose a blogging platform
Weblog Tamil,
பிளாக் எழுதலாம் என உங்களுக்கு தோன்றிய உடனே எழுந்த கேள்வி, எங்கு பிளாக் எழுதுவது என்பதாகத்தான் இருக்கும். சரிதானே?
ஆனால், நீங்கள் Self hosted platforms - ல் பிளாக் எழுதுங்கள் என பெருவாரியான வர்கள் கூறுகின்றனர் . இது ஏன் free platform -இல் பிளாக் எழுதக்கூடாது என உங்களுக்கு கேள்வி எழும் அல்லவா?
அந்த கேள்விக்கு பதில்
பிளாக் எழுதலாம் என நினைப்போருக்கு இரண்டு வகையான Platforms உள்ளன. அவை :
1. Free platforms
2. self hosted platforms.
இந்த இரண்டைப் பற்றியும் தெரிந்தால், நீங்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்கமுடியும்.
Free Platforms :
புதியதாக பிளாக் எழுத ஆரம்பிக்கும் நிறைய பேருக்கு WordPress.com, blogger போன்ற Free platforms உள்ளன.
அவற்றில் உங்கள் பிளாக்கை எழுதினால் அவர்களின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். அவர்களால் எந்தவித காரணமின்றியும் உங்களுடைய பிளாக்கை அழிக்க(terminate) செய்ய முடியும். அது மட்டுமில்லாமல் அவர்களுடைய domain name ஆனது உங்களுடைய blog URL -லின் பின்னே வரும்.
உதாரணத்திற்கு, நீங்கள் blogger இல் பிளாக் தொடங்கினால், உங்களின் blog name ஆனது Yourblogname.blogspot.com என்பது போல் வரும். இப்படி பெயர் வந்தாலும் பரவாயில்லை என நீங்கள் கருதினாலும் சில சமயங்களில் மக்கள் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் போய்விடவும் வாய்ப்பு உள்ளது. (நீங்கள் famous ஆக இல்லாமல் இருக்கும்போது).
Free Platform ஐ பயன்படுத்துவதில் ஒரு சிறப்பு என்னவெனில் நீங்கள் எவ்வித கட்டணமும் செலவிட தேவையில்லை.
உங்களின் பிளாக்கில் விளம்பரங்களை கொடுக்கும்போது, அவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில சமயங்களில் அவர்களுடைய விளம்பரத்தையே கொடுத்துவிடுவார்கள்.
நீங்கள் உண்மையாகவே, பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் Self hosted platforms -க்கு செல்வது நல்லது.
Self hosted platforms :-
Self hosted platforms ஆனது உங்களின் சொந்த blog name -ஐ பயன்படுத்த அனுமதிக்கின்றன.
மிகப் பிரபலமாக உள்ள self hosted platform எதுவெனில் WordPress.org ஆகும். இந்த உலகில் உள்ள 30% பிளாக்கர்கள் இதையே பயன்படுத்துகின்றனர்.
இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான Plugin ஐ எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு Coding அறிவும் தெரியாமல், உங்களால் பிளாக்கை கட்டமைக்க முடியும்.
Free platform ஆன blogger இல் பிளாக் தொடங்கலாமா அல்லது Self hosted platform ஆன WordPress.org இல் பிளாக் தொடங்கலாமா என உங்களுக்கு கேள்வி எழுந்தால் பின்வரும் இணைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment