உங்கள் வலைப் பதிவுக்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுக் கவும்: Select a perfect niche for your blog

Blog பகுதி - 2,

உங்கள் வலைப் பதிவுக்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுக் கவும்:

Select a perfect niche for your blog :

Weblog Tamil,

நீங்கள் பிளாக் எழுத வேண்டும் என முடிவெடுத்த பின்னர், மிக முக்கியமாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, உங்களுடைய பிளாக்கின் "Niche". அதாவது நீங்கள் பிளாக்கில் எதைப் பற்றி எழுதப்போகிறீர்கள் என்பதே. அதாவது ஆங்கிலத்தில்  blog topic.

நீங்கள் சினிமா செய்திகள், சமையல் குறிப்புகள், அழகு
குறிப்புகள், மருத்துவம் என பல தலைப்புகளில் எழுதி, அதை ஒரே பிளாக்கில் பதிவிடலாம் என இருப்பீர்கள். அது இக்காலகட்டத்தில் வேலை செய்யாது. 

நீங்கள் ஒரே தலைப்பில் பிளாக்கை எழுதுங்கள். சமையல் குறிப்பு பற்றி எழுதலாம் என நினைத்தீர்கள் எனில் அதைப்பற்றி மட்டுமே பிளாக் எழுதுங்கள். 

மற்ற தலைப்புகளையும் அந்த பிளாக்கில் சேர்க்காதீர்கள். அப்பொழுதுதான் உங்களின் வெற்றிக்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய பிளாக்கிற்க்கான தலைப்பை (topic) ஐ கண்டுபிடிப்பது எப்படி?

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். மற்ற எதையும் விட உங்களுக்கு நன்றாகத் தெரிந்த தலைப்பை கண்டறியுங்கள். இது நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அதிகம் பேச விரும்பும் தலைப்பைப் பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.

அதைப்பற்றி நீங்கள் பல மணி நேரம் வசதியாக பேசலாம்.
  • நீங்கள் வழக்கமாகப் படிக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் எப்போதுமே படித்த தலைப்பு உங்களுக்கு விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.

  • மேலும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் சொந்த நுண்ணறிவால் மதிப்புகளைச் சேர்க்கலாம்.
  • புதியவர்களுக்கு,  பேனா பேப்பரின்   உதவியோடு உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளை கண்டுபிடிக்க நான் பரிந்துரைப்பேன். 

  • அது எப்படியெனில் நீங்கள் விரும்பும் தலைப்புகளை நெடுவரிசையாக (column) எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக பேஷன், தொழில்நுட்பம், நிதி, புகைப்படம் எடுத்தல், அறிவியல் ஆராய்ச்சி, குழந்தை பராமரிப்பு, சுகாதார பாதுகாப்பு மற்றும் பல. இப்போது அந்த வெவ்வேறு நெடுவரிசையாக உள்ள தலைப்புகளுக்கு 5 பதிவுகளுக்கான(post) யோசனைகளை எழுத முயற்சி செய்யுங்கள். நீங்கள் பதிவிற்கான தலைப்பை எழுதும்போது, குறிப்பு எடுக்காமல் நீங்கள் என்ன எழுதலாம் என்று சிந்தியுங்கள். ஐந்தாவது கட்டுரையின் முடிவில், நீங்கள் மிகவும் விரும்பும் தலைப்பை(niche) கண்டு பிடிக்க இது உதவும்.

வலைப்பதிவை தொடங்குவதற்கு முன் இது ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில் நீங்கள் மிகவும் விரும்பும் ஒரு தலைப்பை தேர்வு செய்ய இது உதவும். 

நீங்கள் பேச விரும்பும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு  கடினமான காலம் ஒருபோதும் வராது என்பதை உறுதிசெய்யும். 

எனவே உங்கள் வலைப்பதிவிற்கான முக்கிய தலைப்பை(Niche)  தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கருதுகிறேன். இது உங்களுக்காக  கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்.

இது பொருத்தமான niche -ஐ தேர்ந்தெடுப்பதில் ஒரு புதிய வலைப்பதிவை தொடங்குவதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும்.

Comments

Popular posts from this blog

பிளாக்கை எவ்வாறு தொடங்குவது ? How To Start A Blog in Tamil

பிளாக் (Blog) என்றால் என்ன? What is a Blog?

பிளாக்கிங் தளத்தைத் தேர்வு செய்தல் | Choosing a Blogging Site