உங்கள் வலைப்பதிவில் முக்கியமான பக்கங்களைச் சேர்க்கவும் | Add important pages on your blog in tamil
உங்கள் வலைப்பதிவில் முக்கியமான பக்கங்களைச் சேர்க்கவும் | Add important pages on your blog in tamil நீங்கள் பிளாக் எழுத தொடங்கிய முதல் நாளில் இருந்தே பின்வரும் பக்கங்கள்(pages) உங்களின் பிளாக்கில் அவசியமாக இருக்கவேண்டும். i. About page : உங்களைப் பற்றியும் உங்கள் பிளாக்கை பற்றியும் தகவல்கள் இந்த page -ல் இருக்க வேண்டும். நீங்கள் யார், என்ன படித்தீர்கள், எதனால் பிளாக் எழுதுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை கொடுக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் என்னுடைய "About me" page ஐ பார்க்கலாம். ii. Contact page :- உங்கள் பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க மற்றும் அவர்களின் சந்தேகங்களை உங்களிடம் கேட்டறிய இந்த page ஐ பயன்படுத்தலாம். அதில் நீங்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதள பக்கத்தின் முகவரி அல்லது contact form ஐ கொடுக்கலாம். iii. Media kit page :- தற்பொழுது இந்த page உங்களுக்கு தேவையில்லை. ஆனால் இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த page இல...